
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பொது சுகாதாரம், கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கு நிப்பான் அறக்கட்டளை பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
