
தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே பிரிவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
முந்தைய ஆட்சியின் போது ராஜபக்சர்கள் பல்வேறு நிதி மோசடிகளைச் செய்ததாகவும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதைப் பகிரங்கப்படுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுதியளித்திருந்தது.

ஆனால் இப்போது, அவர்களின் ஆட்சி நடவடிக்கைகள் குறித்து சமூக மட்டத்தில் எதிர்மறையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
எனினும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதன் காரணம் யாது என எதிர் தரப்புக்கள் கேள்விகளை முன்வைக்கின்றன.