கனடா தப்பிக்க முயன்ற யாழ். தம்பதி கைது…

இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியினர் கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலியான விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கைதான கணவர் 40 வயதுடையவர், மனைவி 34 வயதுடையவர் என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் பயணிக்க அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தனர்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    தமிழர்கள் வாழும் இடத்தில் துப்பாக்கி வன்முறை.

    மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும்…

    மேலும்...

    குரங்கு பாய்ந்து விபத்து – பெண் பலி!

    2025-02-24 மதியம் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காமன்ஸ்க்கு மிக…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *