டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்படுவதை அமெரிக்கா தனது வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டி தடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை இணைந்து துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத மையங்களை அழித்தது.
மிஞ்சிய பிரச்சினை, பாகிஸ்தான் பிடித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தான் மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய நேரம் முதல், மே 10 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான உரையாடல்கள் நடந்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் தொடர்பான விவாதம் எதுவும் இடம் பெறவில்லை” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.








