யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 27 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று நயினாதீவு செல்வதற்காக அரசுப் பேருந்தில் குறிகட்டுவான் நோக்கி பயணம் செய்தார்.

இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.










மட்டக்களப்பு வாகரை கிராமத்தில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி கவலையை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள புதிய திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா?