
மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வனத்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மனித உரிமைக்கு எதிரான செயல்களை செய்து மக்களை தாக்கியதால், அப்பகுதி மக்கள் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று (25.02.2025 )இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தப் பகுதி மக்களின் கஷ்டங்களையும், வேதனைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நேற்று மதியம் 2 மணிக்கு மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி நான்காம் கட்டை பகுதிக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நாட்களாக அங்கு வசிக்கும் மக்களை மிரட்டி உடனடியாக வெளியேற சொன்னதோடு, 3 பேர் மீது வழக்கு போட தகவல்கள் சேகரித்தனர்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.