வியக்கவைக்கும் தமிழில் ஓரெழுத்து சொற்கள்….

அ —–> எட்டு
ஆ —–> பசு
இ —–> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி
உ —–> சிவன்
ஊ —–> தசை, இறைச்சி
எ —–> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ —–> அம்பு
ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஒ —–> ஒழிவு
ஓ —–> வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
ஒள —–> பூமி, ஆனந்தம்
கா —–> சோலை, காத்தல்
கூ —–> பூமி, கூவுதல்
கு —–> இருள்
கை —–> கரம், உறுப்பு
கோ —–> அரசன், தலைவன், இறைவன்
சா —–> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ —–> இகழ்ச்சி, திருமகள்
சே —–> எருது, அழிஞ்சில் மரம்
சோ —–> மதில்
தா —–> கொடு, கேட்பது
தீ —–> நெருப்பு
து —–> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ —–> வெண்மை, தூய்மை
தே —–> நாயகன், தெய்வம்
தை —–> மாதம்
ஞா —–> பொருத்து, கட்டு
நா —–> நாக்கு
நீ —–> நின்னை
நே —–> அன்பு, நேயம்
நை —–> வருந்து, நைதல்
நொ —–> நொண்டி, துன்பம்
நோ —–> நோவு, வருத்தம்
நௌ —–> மரக்கலம்
பா —–> பாட்டு, நிழல், அழகு
பூ —–> மலர்
பே —–> மேகம், நுரை, அழகு
பை —–> பாம்புப் படம், பசுமை, உறை
போ —–> செல்
ம —–> சந்திரன், எமன்
மா —–> மாமரம், பெரிய, விலங்கு
மீ —–> ஆகாயம், மேலே, உயரம்
மு —–> மூப்பு
மூ —–> மூன்று
மே —–> மேன்மை, மேல்
மை —–> அஞ்சனம், கண்மை, இருள்
மோ —–> முகர்தல், மோதல்
யா —–> அகலம், மரம்
வா —–> அழைத்தல்
வீ —–> பறவை, பூ, அழகு
வை —–> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ —–> கௌவுதல், கொள்ளை அடித்தல்
ள —–> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு —–> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று —–> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    யூடியூபில் அதிக பார்வைகளை பெறுவது எப்படி?

    இன்றைய காலத்தில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்கு தளமாக இல்லை. கல்வி,…

    மேலும்...

    லா நீனா மீண்டும் வருமா? உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

    ஜெனீவா, செப்டம்பர் 2025 – உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *