கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் !!!

30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவர முயன்றதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் ஒருவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் தேதி மாலை 4.30 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் அவர் இலங்கைக்கு வந்திறங்கினார்.

இருப்பினும், அவரது பொருட்கள் அதே விமானத்தில் கொண்டு வரப்படவில்லை. அதன் பின்னர், அவரது பொருட்கள் தனி விமானத்தில் சுங்க திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று குறித்த பொருட்களை பெற்று கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருவதால், குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *