
மேஜர் தரத்திற்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தமது கடவுச்சீட்டுக்களை அவரவர் படைப்பிரிவுகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் தூர இடங்களில் பணிபுரிவதால், கடவுச்சீட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கம குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்கள் எந்த நேரத்திலும் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கடவுச்சீட்டுகளைப் படைப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று இராணுவப் பேச்சாளர் கூறினார்.
மேலும், இந்நடவடிக்கை நிர்வாக காரணங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.