
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கசிப்பு விற்பனை செய்ய இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் இன்று (14.02.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10 வட்டாரத்தில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சுவதாக மற்றும் விற்பனை செய்வதாக ஒட்டுசுட்டான் குற்றத்தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரிகள், 25 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்பு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்னால் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.