
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங் கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ் டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் ‘சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண் டும் என்று வேண்டினார்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்து மறுநாள் காலை உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங் களையும் தந்து மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னைய வள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகைக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டா டப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
சிவராத்திரி விரதம் இருப்பதால் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர் சிவராத்திரிக்கு முதல் நாள் 25.02.25 செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து பின் சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
மாலையில் மீண்டும் சிவபூஜை செய்ய வேண்டும்.
அன்று இரவு 25.02.2025 செவ்வாய்க் கிழமை முழுவதும் சிவனை நினைத்து மந்தி ரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.(அன்றைய தினம்
ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்)
மறு நாள் 26.02.25 புதன்கிழமை,அதிகாலையில் குளித்து சூரிய உதயத்துக்கு முன் பாக சிவசிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றி யில் திருவெண்ணீறு அணி ந்து, கையில் ருத்திரா ட்ச மாலையுடன் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்க ளோடு சிவன் கோயில் சென்று அங்கு நான்கு காலங்களி லும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வண ங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.
சிவராத்திரி நாளில் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் பால், பழங் களை உண்ணலாம்.
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான (25.02.2025 செவ்வாய்) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் (26.02.2025 புதன்கிழமை) அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு
நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் (வியாழன் 27.02.2025) காலை விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
விரதத்தின் அம்சங்கள்
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது டன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்க ளுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.