
‘OPEN AI’ நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்து வாங்க Elon Musk மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி நடத்திக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் பார்வை தற்போது ‘OPEN AI’ நிறுவனத்தின் மீது விழுந்துள்ளது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன்(Sam Altman) உள்ளதுடன் 2015இல் ‘OPEN AI’ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர் ஆவார்.

ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன்
“வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டொலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் சாம் ஆல்ட்மேன்
Can you post football news