
19 வயதுக்குட்பட்ட மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணப்போட்டிகளின் இன்றைய ஆட்டம் ஒன்றில், இலங்கை அணியை 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 118 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தனர் . கோங்கடி த்ரிசா, 58 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பருணிகா தனது 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சிறந்த வீராங்கனை-Trisha Gongadi

Ist guter
Supper..