
சூரியன் முதல் கேது வரையுள்ள 9 கிரகங்கள், மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகள் மற்றும் அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையான 48- என்பது ஒரு மண்டலம் ஆகும்.

வருடத்தின் எந்த நாளாக இருந்தாலும், அந்த நாள் தொடங்கி 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கதிர்வீச்சு பெற்ற அனைத்து நாட்களும் கணக்கில் வந்துவிடுகின்றன.
இதன் அடிப்படையில்தான், தொடர்ச்சியாக 48 நாட்களான, ஒரு மண்டலம் காலத்துக்கு செய்யப்படும் எந்த செயலும், வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது..
இயற்கை மருந்து: இதை வைத்துதான், சித்த மருத்துமுறையில் இயற்கை மருந்தை ஒரு மண்டலம் சாப்பிட சொல்கிறார்கள்.. இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் மருந்து சாப்பிடும்போது, எப்பேர்ப்பட்ட நோயும் நிரந்தரமாக குணமடையும் என்பது ஐதீகம்.
அதேபோல, ஆன்மிக ரீதியாக தொடர்தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் இறைவழி பாடுகள் அல்லது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
விரத முறைகள்: பெண்களுக்கு இது முடியாது.. எனினும், மாதவிலக்கு ஆன காலங்களில் விரதத்தை நிறுத்தி விட்டு,
மீண்டும் பூஜை அறைக்கு செல்லும் நாளில் துவங்கி, மீண்டும் விரதத்தை துவங்கலாம்.
குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை இருப்பவர்கள் விரதம் இருக்கும் 48 நாட்களும் கண்டிப்பாக தாம்பத்யத்தில் ஈடுபடக் கூடாது என்பார்கள்..