
தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமைக்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

நிச்சயமாக இது அரசாங்க கொள்கை அல்லது அரசாங்க வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. எவ்வாறாயினும், உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் முன்நிற்பதாக சபை முதல்வர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.