
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று 29.01.2025 புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 82 ஆகும்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக நேற்று (28) சேர்க்கப்பட்டார்..
வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நேற்றுத் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் சாவடைந்துள்ளார்.