
மனித குல வரலாற்றில் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று இரும்பின் பயன்பாடு என்பதாகும்.
கற் கருவிகளிலிருந்து இரும்புக் கருவிகள் மாறியபோதுதான் மனிதகுல வாழ்வியலும் மாறியது.
நாகரிக வாழ்வின் அடிப்படை ஆக்கம் இரும்பே ஆகும்.
வேளாண் தொழில் முதல் கொண்டு வேட்டையாடுதல் வரை ஆரம்பித்து..
படைக்கருவி, மரம் வெட்ட, வீடு கட்ட, அறுவடை செய்ய, காடு திருத்தி நாடாக உருவாகி உண்ணும் உணவு முதல் அனைத்து அடிப்படைக் கருவிகளின் ஆக்கம் இரும்புதான்.

ஏன்..?
செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களில் கருவிகள் செய்ய முடியாதா என்றால்..
நிச்சயமாக முடியும். ஆனால் வெள்ளி, செம்பு போன்ற தாதுக்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மிகவும் அரிது. எளிய மக்களின் பயன்பாட்டில் இடம்பெறுவது அரிதிலும் அரிது.
இரும்பு தாதுக்கள் பூமியில் எளிதாக ஏராளமாகக் கிடைத்தது.
பூமியில் கிடைக்கும் மணலுடன் கலந்த இரும்பு தாதுக்களை கண்டறிந்து அதை உலையில் இட்டு காய்ச்சி உருக்கி வடித்து பிரித்து இரும்பாக வார்த்து அதை அன்றாட மக்கள் பயன்பாட்டில் தேவையான கருவிகளாக வடித்து பயன்படுத்தும் உயர்ந்த நாகரிகத்தின் தோற்றம் இரும்பு காலத்தில்தான் துவங்குகிறது.
இந்த இரும்புக்காலத்தின் துவக்கம் தமிழகத்தில்தான் என்று சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்பின் காலத்தை தொல்லியல் சான்றுகள் மூலம் உறுதிசெய்தனர்.
இரும்பு என்பதன் பொருள்
நிலைத்து இருக்கும் என்பதாகும்.
திருவள்ளுவர் இரும்பையும்
பொன் என்றே கூறுகிறார்.
இந்த இரும்பின் பயன்பாடு குறித்து ஏராளமானத் தரவுகள் நமது சங்க இலக்கியங்களில் உள்ளன. இரும்பொன், கரும்பொன் என்றும் அழைக்கப்படுகிறது.
இரும்பை கொல்லர் பட்டரையில் காய்ச்சும் முறைகொண்டு அந்த இரும்புக் கருவிகளை துரு பிடிக்காமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் வரை சங்க இலக்கியங்கள் ஏராளமான பாடல்கள் வழி பதிவு செய்கிறது.
இந்த இரும்பை முதன்முதலில் கண்டுபிடித்தவர்களும் பயன்படுத்தியவர்களும் தமிழர்களே என்று . ஆவணங்களுடன் தொல்லியல்துறை வெளியிட்டுள்ளது.
உலகின் அனைத்து நாகரிகங்களிலும் தனக்கான தனித்துவமான இரும்பு நாகரிக காலமாக. BCE 3345 என்று என்ற ஒரு உச்ச காலத்தை தொட்டுள்ளது தமிழர் நாகரிகம்.
சிந்து சமவெளி நாகரிகம் BCE 3300 – 1300 வரை நீடித்திருந்தது. அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை BCE 2600. – 1900 வரை வரையறை செய்கிறார்கள்..
தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு அறிந்த தமிழர் நாகரிக காலம் BCE 3345 என்று நிச்சய்மான அறிவியல் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படுகிறது ..
சிந்துவை பின்னுக்குத் தள்ளி முந்திச் சென்றது தமிழர் நாகரிகம்.
எகிப்து, மெசபடோமியா காலத்திற்கு சரி சமமாக வந்து நின்றது தமிழர் நாகரிகம்.
5365 ஆண்டுகளுக்கு முன்பே வளமான நாகரிக வாழ்வியலை தங்கள் நிலத்தில் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதே இன்றைய நாளின் செய்தியாகும்.