
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிப்சீக், செயற்கை நுண்ணறிவு.அசுர வளர்ச்சி ஒரு நாளில் மட்டும் அமெரிக்கா பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) துறையில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.சீனா இது சாட் ஜி.பி.டி., மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவற்றை விட சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த நிறுவனம் மலிவு விலையில் சேவையை வழங்குகிறது. இது ஏ.ஐ., துறையில் புதிய போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஏற்படுத்திய தாக்கத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஏ.ஐ., சந்தையில் பிரபலமாக இருந்து வந்த Nvidiaன் பங்கு விலை 17% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

ஒரு நாளில் மட்டும் அமெரிக்கா பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல் டெக்னாலஜிஸ் மற்றும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் ஆகியவை 7.2 சதவீதம் மற்றும் 8.9 சதவீதம் சரிந்தன.
ஏ.ஐ., துறையில் இருக்கும் மைக்ரோசாப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ் மற்றும் ஆல்பபெட் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் இன்று 2.2% முதல் 3.5% வரை சரிந்தன.
குறைந்த செலவில் தரமான ஏ.ஐ., அமைப்புகளை உருவாக்கும் சீனாவின் திறன் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கின் சரிவிற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்