
காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்ணகுலராசா பிரதீபன் ஆவார்.

யாழ்ப்பாணம் சென்று காதலர் தினத்தை கொண்டாட விரும்பிய இளைஞனின் விருப்பத்தை காதலி நிராகரித்ததால், அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இளைஞன் தொடர்ந்து தொல்லை செய்ததால், அந்தப் பெண் அவர் மீது பலமுறை கோபப்பட்டார்.