
காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழியானது தமிழ் பேசும் அனைவருக்கும் தாய் மொழியாக சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள நூல் என்று சொல்லப்படுகிறது.

தாய் நாடான தமிழ்நாட்டினை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநிலத்தில் உள்ள மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழ் மொழியை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழ் மொழி சிறந்து விளங்கக்கூடிய மொழியாக உள்ளது. 19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும்அனுப்பிவைக்க பட்டனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் மொழி சிறந்து ஓங்கியது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர் பாரதியார்.
அனைவருக்கும் இனிய தமிழ் தின வாழ்த்துக்கள் 🔱