

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. போன் அழைப்புகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, பெரும்பாலான மக்கள் தற்போது தங்கள் முக்கியமான தரவைச் சேமிக்க ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாள் முழுவதும் மொபைலில் படங்கள் மற்றும் வீடியோக்கள் குவிந்து கொண்டே இருக்கும். எனவே ஸ்மார்ட் போனில் சேமிப்பிடம் இருப்பது மிகவும் முக்கியம்.
போன் ஸ்டோரேஜ் நிரம்பினால் பல பிரச்சனைகள் எழுகின்றன. போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை டெலிட் செய்வதுதான் ஒரே வழி என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு வேறு வழி உண்டு. மொபைல் ஸ்டோரேஜை எவ்வாறு அளிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

1. அனைவருக்கும் Google கணக்கு உள்ளது. கூகுள் கணக்கில் 15ஜிபி வரை டேட்டாவை இலவசமாக சேமிக்கலாம். ஆகையால் இந்த Google கணக்கைப் பயன்படுத்தலாம்.
2. Google Photos, OneDrive அல்லது பிற கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றலாம். இது போனின் சேமிப்பை வெகுவாகக் குறைக்கும்.
3. குக்கீகள் தேவையில்லாமல் போன் ஸ்டோரேஜை அதிகரிக்கின்றன. அதேபோல், போனில் உள்ள பல பயன்பாடுகள் cache மற்றும் cookies-ஐ சேமிக்கின்றன. இந்த கோப்புகள் காலப்போக்கில் குவிந்து, தொலைபேசியின் ஸ்டோரேஜை நிரப்ப முடியும்.
4. தொலைபேசி செட்டிங்கிற்கு (phone settings) சென்று cache மற்றும் cookies-ஐ நீக்கவும். இதனால் போனின் ஸ்டோரேஜ் அதிகமாகும். முக்கியமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதையும் நீக்க வேண்டிய அவசியமில்லை.
5. பல பயன்பாடுகள் தானாகவே வீடியோ, ஆடியோ அல்லது பிற கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும். இந்தப் பயன்பாடுகளின் செட்டிங்கிற்கு சென்று தானாக பதிவிறக்கும் ஆப்சனை முடக்கலாம். இதன் மூலம், கோப்புகள் தானாக பதிவிறக்கம் செய்யப்படாது மற்றும் போனில் இடத்தை சேமிக்கும்.