
தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் ஓட்டப் பந்தயம் நடத்துகிறது சீனா.

தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ரோபோட்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இந்த போட்டியில் 12,000 மனிதர்கள் பங்கேற்கவுள்ளனர்.