
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இன்று ( 16.02.2025 )இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்தது 26 வயதுடைய தனுசன் என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தவறான முடிவு எடுத்ததாலேயே உயிரிழந்தார் என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.