
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடனேயே சர்வதேச அரசியல் மொத்தமாக மாற தொடங்கியுள்ளது. பைடன் இருந்தவரை அமெரிக்கா- சவுதி இடையேயான உறவு சிறப்பாக இல்லாத நிலையில், டிரம்ப் வந்த உடனேயே அமெரிக்காவில் சுமார் 600 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளதாகச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

முன்பு சவுதியில் இருந்து தான் அமெரிக்கா அதிகப்படியான கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஆனால், இப்போது அமெரிக்காவிலேயே போதியளவில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் அமெரிக்கா சவுதியை நம்பி இருக்கத் தேவையில்லை. அதேநேரம் இதுநாள் வரையிலும் கூட சவுதி ராணுவம் அமெரிக்க ஆயுதங்களையே நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.